மகாதேவனின் உடலுக்கு டிடிவி தினகரன் அஞ்சலி - அமைச்சர்கள் பங்கேற்பு

Asianet News Tamil  
Published : Apr 15, 2017, 06:56 PM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
மகாதேவனின் உடலுக்கு டிடிவி தினகரன் அஞ்சலி - அமைச்சர்கள் பங்கேற்பு

சுருக்கம்

ttv dinakaran and ministers pay respect to magadevan

சசிகலாவின் இரண்டாவது அண்ணன் மகன் மகாதேவன் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் அதிமுக அமைச்சர்களும் அஞ்சலில் செலுத்தினர்.

அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற குழு தலைவருமான சசிகலாவின் இரண்டாவது அண்ணன் மகன் மகாதேவன்.

இவர் தஞ்சாவூரில் உள்ள  தனது வீட்டில் இருந்து இன்று காலை கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சாமி கோயிலுக்கு தரிசனம் செய்ய சென்றுள்ளார்.

கோயிலின் பிரகாரத்தைச் சுற்றி வந்தபோது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அரசு மருத்துவமனையில் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கபட்டது.

தொடர்ந்து கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி, மகாதேவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், மகாதேவனின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள டி.டி.வி. தினகரனும், அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, தங்கமணி, எஸ்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தஞ்சாவூர் விரைந்தனர்.

இன்று மாலை தஞ்சாவூர் சென்ற அவர்கள் மகாதேவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

 

PREV
click me!

Recommended Stories

தீபம் ஏற்றும் நாள் விரைவில் வரும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சர்ச்சை பேச்சு!
எனக்கே சேலஞ்சா.. திமுகவை வேரோட அழிச்சுருவோம்.. ஸ்டாலினுக்கு பழனிசாமி வார்னிங்!