தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, காவிரி நீர் விவகாரம் : தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, காவிரி நீர் விவகாரம் : தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

Published : Nov 16, 2026, 10:02 PM IST

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தெலங்கானா முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன், காவிரி நதிநீர் விவகாரம், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை மற்றும் திருச்செந்தூர் சூரசம்ஹார விழா ஏற்பாடுகள் குறித்துத் தனது கருத்துகளைப் பதிவு செய்தார். காவிரி விவகாரம் குறித்துப் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு இரு மாநில உரிமைகளும் பாதுகாக்கப்படுவதாகத் தெரிவித்தார். கர்நாடக காங்கிரஸ் அரசு மேகதாது அணை கட்டுவோம் எனக் கூறி வரும் நிலையில், தமிழகத்திற்குத் தண்ணீர் பெற்றுத் தர முடியாவிட்டால் தமிழக அமைச்சரவையில் உள்ள இரண்டு காங்கிரஸ் அமைச்சர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், டெல்லியில் சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் தமிழக முதலமைச்சர், கர்நாடக ஆளும் கட்சியின் தலைவர்களிடம் மேகதாது அணையைக் கட்டக் கூடாது எனவும், காவிரி நீரைத் திறந்துவிடவும் முதலில் கோரிக்கை வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

03:24அமைச்சர் பதவியை விட தளபதி ஸ்டாலின் குடும்பத்துடன் வந்து வாழ்த்துவதே மகிழ்ச்சி - KN.நேரு நெகிழ்ச்சி!
05:51திருச்சியில் திராவிடர் கழகத்திற்கு அரணாகத் திகழ்பவர் கே.என். நேரு - தமிழர் தலைவர் கி. வீரமணி பேச்சு
04:55முன்னாள் அமைச்சர் கே.என். நேரு இல்லத் திருமண விழா: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நெகிழ்ச்சி !
04:44எந்த மிரட்டலுக்கும் பணியக்கூடியவர் கே.என். நேரு இல்லை - திருமண விழாவில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு
08:19மேகதாது விவகாரத்தில் தமிழக உரிமையை முதல்வர் மீட்டு வர வேண்டும் ! - அண்ணாமலை வலியுறுத்தல்!
03:20திருச்செந்தூர் முருகன் கோவிலில் களைகட்டிய சூரசம்ஹார பெருவிழா: கடல் அலையெனத் திரண்ட பக்தர்கள் !
06:38திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சூரசம்ஹார விழா !
05:12திருச்சியில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத் தொடக்கம்: 150 கிலோ பிளம் கேக் தயாரிப்புப் பணிகள் !
06:17அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்கட்டண உயர்வு, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு ! செல்லூர் ராஜு பேட்டி