
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குச் சட்டமன்ற உறுப்பினர் அருண் விக்னேஷ் தகாத முறையில் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகாரைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) சார்பில் வருகிற செவ்வாய்க்கிழமை கள்ளக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.