எந்த மிரட்டலுக்கும் பணியக்கூடியவர் கே.என். நேரு இல்லை - திருமண விழாவில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு

எந்த மிரட்டலுக்கும் பணியக்கூடியவர் கே.என். நேரு இல்லை - திருமண விழாவில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு

Published : Nov 16, 2026, 09:02 PM IST

சென்னையில் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் - சங்கரி ஆகியோரின் மகன் விஷால் நாராயணன் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த ஜெகதீஷ் பாட்டில் - அனுபமா ஆகியோரின் மகள் ரிஷா பாட்டில் ஆகியோரின் சுயமரியாதைத் திருமண விழா, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். விழாவில் வாழ்த்துரை வழங்கிய திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி, கட்சிப் பணிகள், மாநாடுகள் மற்றும் தேர்தல் பணிகளை மிகத் திறமையாகக் கையாளக்கூடியவர் கே.என். நேரு என்பதால், திமுக அல்லாத கட்சிகள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் அவருக்குச் 'சிறப்புக் கவனிப்பு' அளிக்கப்படுவதாகவும், தற்போது வாரத்திற்கு ஒருமுறை அவரது வீட்டில் சோதனைகள் (Raid) நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார். எத்தகைய மிரட்டலுக்கும் பணியக்கூடியவர் கே.என். நேரு இல்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய கனிமொழி, கே.என். நேருவையும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் எப்படிப் பிரிக்க முடியாதோ, அதேபோன்று மணமக்களின் மணவாழ்க்கையும் உறுதியோடும் அன்போடும் நிலைத்திருக்க வேண்டும் என வாழ்த்தினார்.

04:55முன்னாள் அமைச்சர் கே.என். நேரு இல்லத் திருமண விழா: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நெகிழ்ச்சி !
04:44எந்த மிரட்டலுக்கும் பணியக்கூடியவர் கே.என். நேரு இல்லை - திருமண விழாவில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு
08:19மேகதாது விவகாரத்தில் தமிழக உரிமையை முதல்வர் மீட்டு வர வேண்டும் ! - அண்ணாமலை வலியுறுத்தல்!
03:20திருச்செந்தூர் முருகன் கோவிலில் களைகட்டிய சூரசம்ஹார பெருவிழா: கடல் அலையெனத் திரண்ட பக்தர்கள் !
06:38திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சூரசம்ஹார விழா !
05:12திருச்சியில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத் தொடக்கம்: 150 கிலோ பிளம் கேக் தயாரிப்புப் பணிகள் !
06:17அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்கட்டண உயர்வு, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு ! செல்லூர் ராஜு பேட்டி
02:13குரூஸ் பெர்னாண்டஸின் 157-வது பிறந்தநாள் விழா: அரசு சார்பில் மரியாதை செலுத்திய அமைச்சர் ஸ்ரீநாத்!
02:38காவிரி துலா உற்சவப் பெருவிழா: மயிலாடுதுறையில் கோலாகலமாக நடைபெற்ற திருக்கோவில் தேரோட்டம்!