திருச்சியில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத் தொடக்கம்: 150 கிலோ பிளம் கேக் தயாரிப்புப் பணிகள் !

திருச்சியில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத் தொடக்கம்: 150 கிலோ பிளம் கேக் தயாரிப்புப் பணிகள் !

Published : Nov 15, 2026, 07:02 PM IST

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுப் பண்டிகைக் காலத்தை வரவேற்கும் விதமாக, திருச்சிராப்பள்ளியில் உள்ள நட்சத்திர ஹோட்டலான 'கோர்ட்யார்ட் பை மேரியட்' (Courtyard by Marriott) சார்பில் பாரம்பரிய கேக் மிக்ஸிங் (Cake-Mixing) விழா இன்று (நவம்பர் 15) உற்சாகமாக நடைபெற்றது. இந்நிகழ்வு குறித்துப் பேசிய ஹோட்டலின் தலைமைச் சமையல் கலைஞர் (Executive Chef) சுரேஷ், திருச்சியில் இவர்களது ஹோட்டல் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்து 5-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைச் சிறப்பிக்கும் வகையில் இந்த விழா நடத்தப்படுவதாகத் தெரிவித்தார். 150 கிலோ எடையுள்ள கிறிஸ்துமஸ் பிளம் கேக் (Plum Cake) தயாரிப்பதற்காக, கிரான்பெர்ரி, புளூபெர்ரி, பிளாக்பெர்ரி, உலர் திராட்சை, முந்திரி, பாதாம், வால்நட் உள்ளிட்ட சுமார் 22 வகையான உலர் பழங்கள் (Dry Fruits) மற்றும் நறுமணப் பொருட்கள் ஆகியவை பிராந்தி, விஸ்கி போன்ற உயர்தர பானங்களுடன் சேர்த்து ஊறவைக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய முறையில் சுமார் 20 நாட்கள் ஊறவைக்கப்படும் இந்தக் கலவையைக் கொண்டு தயாரிக்கப்படும் சுவையான கிறிஸ்துமஸ் பிளம் கேக் மற்றும் இனிப்பு வகைகள், டிசம்பர் முதல் வாரத்திலிருந்து பொதுமக்கள் விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என அவர் கூறினார்.

06:38திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சூரசம்ஹார விழா !
05:12திருச்சியில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத் தொடக்கம்: 150 கிலோ பிளம் கேக் தயாரிப்புப் பணிகள் !
06:17அறிவிக்கப்படாத மின்வெட்டு, மின்கட்டண உயர்வு, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு ! செல்லூர் ராஜு பேட்டி
02:13குரூஸ் பெர்னாண்டஸின் 157-வது பிறந்தநாள் விழா: அரசு சார்பில் மரியாதை செலுத்திய அமைச்சர் ஸ்ரீநாத்!
02:38காவிரி துலா உற்சவப் பெருவிழா: மயிலாடுதுறையில் கோலாகலமாக நடைபெற்ற திருக்கோவில் தேரோட்டம்!
06:50மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தொடங்கி வைத்தார்!
08:34சென்னை அயனாவரம் பள்ளியில் குழந்தைகள் தின விழா: மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய ஆதவ் அர்ஜுனா!
07:37பழைய ஆட்சியை விடக் குறைவு எனச் சொல்லித் தப்பிக்காதீர்கள் - முஸ்லிம்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு !
02:12கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் ! - ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தகவல் !