
சிவகங்கை
சிவகங்கையில் பணி புரிந்து வரும் காவலாளர்களுக்கு மன அழுத்தம் குறைக்கும் பயிற்சி முகாம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் காவலாளர்களுக்கு மன அழுத்தம் குறைக்கும் பயிற்சி முகாம் நேற்று நடைப்பெற்றது.
இந்தப் பயிற்சி முகாமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயசந்திரன் தொடக்கி வைத்தார்.
இதில், மதுரையைச் சேர்ந்த உளவியல் நிபுணர் ராஜேந்திரன் பங்கேற்று, காவலாளர்கள் மன அழுத்தத்தை எவ்வாறு குறைப்பது? என்பது குறித்தும், சவால் நிறைந்த பணியை கையாளும் விதம் குறித்தும் விளக்கம் அளித்தார்.
இந்த முகாமில் சிவகங்கை மாவட்டக் காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவலாளர்கள் உள்ளிட்ட ஏராளமனோர் பங்கேற்று பயிற்சிப் பெற்றனர்.