
செங்கல்பட்டு அருகே தண்டவாளத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடி மீது மின்சார ரயில் மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கபடி வீரர் அலெக்ஸ் (21). இவர் மறைமலை நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருடன் வேலை பார்த்து வந்த தூத்துக்குடியை சேர்ந்த ஆரோக்கிய ஜெர்சலின் (20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மலர்ந்துள்ளது. ஜெர்சலின் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் தோழிகளுடன் வீடு வாடகை எடுத்து தங்கி உள்ளார்.
இதையும் படிங்க;- 4 நாளில் முடிந்து போன திருமண வாழ்க்கை.. கார் விபத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த புதுமண தம்பதி..!
இந்நிலையில், இருவரும் சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து செல்லும் பகுதியில் இரவு நேரங்களில் அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கம். வழக்கம் போல பேசிக்கொண்டிருந்த போது அந்த நேரத்தில் புறநகர் ரயில் வந்த போது என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து போய் நின்றதால் அவர்கள் மீது ரயில் மோதியதாக கூறப்படுகிறது. இதில், இருவரும் உடல் சிதறிய நிலையில் சடலமாக கிடந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் தாம்பரம் ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்கள் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது தண்டவாளம் அருகே நின்று பேசிக்கொண்டு இருந்தபோது அவ்வழியே சென்ற ரயில் மோதியதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- ஆசை ஆசையாய் நிறைமாத கர்ப்பிணி மனைவியை பார்க்க சென்ற கணவர்.. தலை நசுங்கி உயிரிழந்த பரிதாபம்..!