
தேவர் ஜெயந்திக்காக விதிமுறைகளை மீறி சென்னையில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்றகோரிய வழக்கில் காவல்துறை மற்றும் மாநகராட்சி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. பேனர்களை வைப்பதில் பொதுமக்கள் நீதிமன்ற உத்தரவை மதிப்பதே இல்லை என்று வேதனாஇ தெரிவித்தனர்.
தேவர் ஜெயந்திக்காக சென்னை நத்தனத்திலுள்ள தேவர் சிலைக்கு அருகே பல்வேறு அமைப்புகள் சார்பில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டன. தேவர் ஜயந்தி முடிந்து மூன்று நாட்களுக்கு பின்னும் இந்த டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்படவில்லை.
இது குறித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மாநகராட்சி மற்றும் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளளார். ஆனால் அந்த புகார் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை, இதையடுத்து டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி மகாதேவன் அடங்கிய அமர்வு மின் விசாரணைக்கு வந்தது, அப்போது மனுதாரர் ராமசாமி, விதிமுறைகளை மீறி டிஜிட்டல் பேனர் வைக்கப்படுவதாகவும், இது குறித்து புகார் அளிக்க சென்றபோது வழக்கறிஞர் ஒருவர் தன்னை மிரட்டியதாக நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து நீதிபதிகள், பேனர் வைக்கப்பட்டது தொடர்பாக மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் 2 வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும் மேலும் விதிமுறைகளை மீறி டிஜிட்டல் பேனர்களை கட்டுபடுத்த நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்தாலும் பொதுமக்கள் அவற்றை மதிப்பதில்லை மாறாக உத்தரவுகளை மீறுவதிலேயே குறிக்கோளாக உள்ளனர் என வேதனை தெரிவித்தார்.