அதிர்ச்சியில் சுகாதாரத்துறை.. மேலும் 18 பேருக்கு கொரோனா.. மொத்த பாதிப்பு 70 ஆக உயர்வு..

By Thanalakshmi VFirst Published Apr 25, 2022, 2:27 PM IST
Highlights

சென்னை ஐஐடியில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.
 

சென்னை ஐஐடியில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. ஒரு நாள் பாதிப்பு 25 க்கும் கீழ் குறைவாக இருந்த நிலையில் தற்போது 50க்கும் மேல் அதிகமாக பதிவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தவிடப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் பொது இடங்களில் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை அதிகரித்தல், தடுப்பூசி செலுத்தும் பணி வேகமடுத்துதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல், முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்துதல்  போன்றவை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் அவசர ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர்,”கொரோனா 4 வது அலை வந்தால் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். எந்தவொரு சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசியே முக்கியமாகும். அனைவருக்கும் தடுப்பூசி என்ற நிலை வர வேண்டும்.பொது மக்கள் கூடும் அனைவரும் முகக்கவசம் அணிய நடவடிக்கை வேண்டும். மக்களின் பொருளாதார நிலை பாதிக்காத வண்ணம் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்நிலையில் சென்னை ஐஐடி வளாகத்தில் ஏற்கனவே 60 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மேலும் 18 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 700க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் இதுவரை 78 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்றினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் லேசான காய்ச்சல் மற்றும் தொண்டை வலி மட்டுமே உள்ளது. இதனால ஐஐடி வாளாகத்திலே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.  மேலும் அவர்களுக்கு தேவைப்படும்பட்சத்தில் மருத்துவமனையில் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஐஐடி வளாகத்தில் ஞாயிற்றுகிழமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.

click me!