
2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று காலை 11 முதல் தாக்கல் செய்து வந்தார்.
அதில் முக்கிய அம்சமாக பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
சுங்கச் சாவடி
இதுவரை தனியார் நிறுவனம் மூலம் நடத்தப்பட்டு வரும்,சுங்கச் சாவடி மையங்கள் உள்ளது.இவர்களது கட்டுப்பாட்டில் பல ஆயிரம் கிலோ மீட்டர் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளது.
35க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி மையங்கள் தமிழகத்தில் உள்ளது.தொடக்கத்தில் 40 கி.மீ.க்கு சுங்கச்சாவடிகளில் தொடக்கக் கட்டணமே ரூ.20 ஆக இருந்தது. தற்போது சில இடங்களில் ரூ.150 வரை வசூலிக்கப்படுகிறது.
தமிழகம் உட்பட 14 மாநிலங்களில் இ-வே பில் நடைமுறை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது
இதற்காக, கடந்த 15 நாட்களாக சோதனை முறையில் இருந்து வந்த இந்த சேவை தற்போது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
தமிழகம், ஆந்திரா, பீஹார், கர்நாடகம், புதுச்சேரி, சிக்கிம், தெலங்கானா, கேரளா, உத்தரப் பிரதேசம் உட்பட 14 மாநிலங்களில் இன்று மின்னணு முறை கட்டணம் அமலுக்கு வந்தது.
மின்னணு பரிவர்த்தனைக்கு மத்திய அரசு பெரிதும் ஆர்வம் காட்டி வந்தது. அதனை ஊக்குவிக்கும் பொருட்டு பல திட்டங்களையும் கொண்டு வந்தது. இந்நிலையில் இன்று முதல் சுங்கசாவடியில் மின்னணு கட்டண முறை அமலுக்கு வந்துள்ளதால், இனி நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாத சூழல் நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.