
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர் சிறப்பு சீர்திருத்தப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் எஸ்ஐஆர் பணியின் போது வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட படிவங்களை பூர்த்தி செய்து மீண்டும் அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (11ம் தேதி) நிறைவு பெறுகிறது.
புதன் கிழமை தரவுகளின் படி மொத்தமாக 6 கோடியே 40 லட்சத்து 83 ஆயிரத்து 414 படிவங்கள். அதாவது 99.95 சதவீதங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. பதிவேற்றப்பட்ட கண்க்கீட்டு படிவங்களில் முகவரி மாறியவர்கள், ஒன்றுக்கும் அதிகமான பதவிகளை உடையவர்கள், முந்தைய முகவரியில் இல்லாதவர்கள், உயிரிழந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களும் உள்ளனர்.
அவர்கள் நீக்கப்பட்டு வருகின்ற 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து புதிதாக தங்களை சேர்த்துக் கொள்ளாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.