இன்றும், நாளையும் சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்க இரயில்கள் ரத்து மற்றும் நேரத்தில் மாற்றம்...

Asianet News Tamil  
Published : Mar 03, 2018, 09:16 AM ISTUpdated : Sep 19, 2018, 02:01 AM IST
இன்றும், நாளையும் சென்னை கடற்கரை -  வேளச்சேரி  மார்க்க இரயில்கள் ரத்து மற்றும் நேரத்தில் மாற்றம்...

சுருக்கம்

Today and tomorrow Chennai Beach - Velachery way trains canceled and time changed

திருவள்ளூர்

சென்னை - திருவள்ளூர் பிரிவில் ஆவடி - பட்டாபிராம் மேற்கு பகுதி இடையே பராமரிப்பு பணிகள் நடப்பதால் மார்ச் 3, மற்றும் 4 (அதாவது இன்று மற்றும் நாளை) புறநகர் இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை -  வேளச்சேரி இடையே பறக்கும் இரயில்வழித் தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக மார்ச் 3, 4 ஆகிய தேதிகளில் இரயில் சேவைகள் மாற்றப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரை - வேளச்சேரி வரை மார்ச் 3-ஆம் தேதி காலை 9.50 முதல் மாலை 4 மணி வரை பறக்கும் இரயில் வழித் தடத்தில் இரயில் சேவை இருக்காது.

அதேபோல், வேளச்சேரி - சென்னை கடற்கரை வரை காலை 9.50 முதல் மாலை 4 மணி வரை சேவை இருக்காது.

பறக்கும் இரயில்வழித் தடத்தில் வரும் 4-ஆம் தேதியும் இரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று முழுமையாக ரத்து செய்யப்படும் இரயில்கள்:

1. வேளச்சேரி - பட்டாபிராம் இராணுவப் பகுதிக்கு காலை 8.20, 9.15, நண்பகல் 12.55 மணிக்கு புறப்படும் மின்சார இரயில்கள்.

2. மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் - பட்டாபிராம் இராணுவப் பகுதிக்கு 11.15, 12.20, பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் மின்சார இரயில்கள்.

3. வேளச்சேரி - திருவள்ளூருக்கு நண்பகல் 12.15, முற்பகல் 2.35 மணிக்கு புறப்படும் மின்சார இரயில்கள்.

4. வேளச்சேரி - அரக்கோணத்துக்கு பிற்பகல் 1.35 மணிக்கு புறப்படும் மின்சார இரயில்.

சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே புறநகர் இரயில் சேவையில் இன்று ரத்து செய்யப்படும் மின்சார இரயில்கள்: (சென்னை கடற்கரை வரை மட்டும் இயக்கப்படும்.)

1. பட்டாபிராம் இராணுவப் பகுதி - வேளச்சேரிக்கு காலை 8.45 மணிக்கு புறப்படும் மின்சார இரயில்.

2. திருத்தணி - வேளச்சேரிக்கு காலை 8.50 மணிக்கு புறப்படும் மின்சார இரயில்.

3. திருவள்ளூர் - வேளச்சேரிக்கு முற்பகல் 11.05 மணிக்கு புறப்படும் மின்சார இரயில்

4. ஆவடி - வேளச்சேரிக்கு நண்பகல் 12.10 மணிக்கு புறப்படும் மின்சார இரயில்

5. கடம்பத்தூர் - வேளச்சேரிக்கு நண்பகல் 12.05க்கு புறப்படும் மின்சார இரயில்.

மார்ச் 3-ஆம் தேதி இயக்கப்படும் பயணிகள் சிறப்பு மின்சார இஇரயில்கள்:

1.வேளச்சேரி - ஆவடிக்கு காலை 8.20 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு மின்சார இரயில்.

2. வேளச்சேரி - திருநின்றவூருக்கு காலை 9.15 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு மின்சார இரயில்.

3. மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸ் - திருநின்றவூருக்கு முற்பகல் 11 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு மின்சார இரயில்.

4. மூர் மார்க்கெட் காம்ப்ளக்ஸ் - பட்டாபிராம் ராணுவ பகுதிக்கு பிற்பகல் 1.10 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு மின்சார இரயில்.

5. சென்னை கடற்கரை - திருவள்ளூருக்கு பிற்பகல் 1.10 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு மின்சார இரயில்.

6. சென்னை கடற்கரை - பட்டாபிராம் ராணுவ பகுதிக்கு பிற்பகல் 1.50 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு மின்சார இரயில்.

7. சென்னை கடற்கரை - அரக்கோணத்துக்கு பிற்பகல் 2.25 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு மின்சார இரயில்.

8. ஆவடி - மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸுக்கு காலை 10.05 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு மின்சார இரயில்.

9. திருநின்றவூர் - மூர்மார்க்கெட் காம்ப்ளக்ஸுக்கு முற்பகல் 11.20 மணி மற்றும் நண்பகல் 12 மணிக்கு புறப்படும் பயணிகள் சிறப்பு மின்சார இரயில்.
 

PREV
click me!

Recommended Stories

பெரம்பூரில் முதல்வர் விஜய் அதிரடி ஆட்டம்! மக்களுக்கு நேரடியாக குடும்ப ஸ்மார்ட் கார்டு வழங்கி அதிரடி!
அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு ! பெரம்பூர் இ-சேவை மையத்தில் முதல்வர் விஜய் போட்ட அதிரடி கணக்கு !