வங்கி கணக்குடன் ஆதார் எண், கைபேசி எண் இணைப்பது எதற்கு? விளக்குகிறார் கே.அசோக்குமார் எம்.பி…

First Published Nov 10, 2017, 9:00 AM IST
Highlights
To add a mobile number Explains K. Asokkumar MP ...


கிருஷ்ணகிரி

மத்திய,, மாநில அரசுகள் வழங்கும் மானியங்கள் தகுதியானவர்களிடம் சென்று சேர வேண்டும் என்பதற்காகவே வங்கி கணக்குகளுடன் ஆதார், கைபேசி எண்கள் இணைக்கப்படுகின்றன என்று கே.அசோக்குமார் எம்.பி. தெரிவித்தார்.

கிருஷ்ணகிரியை அடுத்த பெத்ததாளாப்பள்ளி கிராமத்தில், இந்திய அஞ்சல் துறை சார்பில், சேமிப்பு கணக்குடன் ஆதார் எண், செல்லிடப்பேசி எண் இணைப்பு பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

இந்தப் பணியை கே.அசோக்குமார் எம்.பி. தொடக்கி வைத்தார், அப்போது அவர் பேசியது:

“மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் தகுதியான நபர்களின் வங்கி கணக்கில் சேர்க்க வேண்டும். ஒருவரே பல திட்டங்களில் மானியங்கள் பெறுவது தடுக்க வேண்டும்.  அரசின் திட்ட பயன், உரிய நபரிடம் சேர வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

வங்கி கணக்குடன் ஆதார் எண், கைபேசி எண் இணைப்பதன் மூலம், வங்கி கணக்கு புத்தகம் காணாமல் போனால், தங்களது எண்னைத் தெரிவித்து பணத்தை வங்கி கணக்கிலிருந்து பெற்றலாம். 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆறு இலட்சம் அஞ்சல் சேமிப்பு கணக்குகள் உள்ளன. அனைவரும் தங்களது ஆதார் எண், கைபேசி எண் ஆகியவற்றை தங்களது கணக்குடன் சேர்க்க வேண்டும்.

மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இத்தகைய முகாம்கள் நடத்தப்படுகின்றன” என்று அவர் பேசினார்.

இந்த நிகழ்வில் அஞ்சல் துறை பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

click me!