
தமிழகத்தில் திமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்து வருபவர் பெரிய கருப்பன். பெரிய கருப்பன் கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.02 கோடி சொத்து சேர்த்ததாக இவர் மீது லஞ்சஒழிப்புத்துறை வழக்கு தாக்கல் செய்திருந்தது. மேலும் அவரது தாய், மனைவி மற்றும் மகன் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு விசாரணை சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது வந்தது. இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பெரிய கருப்பன் விடுதலை செய்து சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் பெரிய கருப்பன் மட்டுமின்றி அவரது தாய் அவரது தாய் கருப்பாயம்மாள், மனைவி பிரேமா, மகன் ஆகிய 4 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பெரிய கருப்பன் சொத்து குவித்ததற்கான எந்த ஒரு ஆதாரங்களும் நிரூப்பிக்கப்படவில்லை எனக்கூறி நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அமைச்சர் பெரிய கருப்பனுக்கு நிம்மதியை அளித்துள்ளது.