TN Local Body Election: உச்சகட்ட பாதுகாப்பில் தமிழகம்..நாளை வாக்குபதிவு..மாநில தேர்தல் ஆணையர் பேட்டி..

Published : Feb 18, 2022, 08:25 PM IST
TN Local Body Election: உச்சகட்ட பாதுகாப்பில் தமிழகம்..நாளை வாக்குபதிவு..மாநில தேர்தல் ஆணையர் பேட்டி..

சுருக்கம்

மக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் ஸ்ட்ரீம் முறையில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

மக்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் ஸ்ட்ரீம் முறையில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதற்காக வாக்குச்சாவடிகளில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தமிழகம் முழுவதும் 30,735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.வாக்கு எண்ணும் மையங்களிலும் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மூவர் உள்பட 38 மாவட்டங்களிலும் 41 ஐஏஎஸ் அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

கோவை நகரத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவையில் தங்கியிருந்த வெளியூரைச் சேர்ந்தவர்களை ஏற்கனவே வெளியேற்றப்பட்டனர். கோவை மாவட்டத்திற்கு தேர்தல் சிறப்பு பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரி நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். கோவை நகர் பகுதியில் மட்டும் 2,723 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏதுவாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பதற்றமான வாக்குச்சாவடிகளாக கருதப்படும் 5960 வாக்குச்சாவடிகள் வெப் ஸ்ட்ரீம் முறையில் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கொரோனா நோயாளிகள் மாலை 5-6 மணி வரை வாக்களிக்கலாம். அவர்கள் சான்றிதழை காட்டி வாக்களிக்கலாம்.இதுவரை மொத்தம் ரூ.11.89 கோடி பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மாநிலத்தை பொறுத்தவரை பல்வேறு தேர்தல் சீர்திருத்தங்களை கொண்டு வரவேண்டியுள்ளது. சட்ட விதிகளை கொண்டு வந்த பின் அடுத்த தேர்தலில் நோட்டா பயன்படுத்தப்படும்.தேர்தலை சிறப்பாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தர்கா தவிர்த்து மற்ற இடமெல்லாம் இந்துக்களுடையது..! நீதிமன்றமே சொல்லிவிட்டது... அண்ணாமலை பேட்டி
ரேஷன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! மிஸ்பண்ணிடாதீங்க மக்களே!