
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்னாயக் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிக்கு முன்பு 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். எஸ்.ஐ.ஆர். பணிக்குப் பின்பு 5.43 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் 4.61 லட்சம் பேர் உள்ளனர். மூன்றாம் பாலின வாக்காளர்கள் 7,191 வக்காளர்கள் இருக்கிறார்கள். ஆண் வாக்காளர்கள் 2,66,63,233 பேரும் பெண் வாக்காளர்கள் 2,77,06,332 பேரும் உள்ளனர். மொத்தமாக வரைவு வாக்காளர் பட்டியலில் 5,43,76,755 வாக்காளர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது.
நீக்கப்பட்டவர்களில் இறந்துபோன வாக்காளர்கள் 26,94,672 பேர். முகவரியில் இல்லாதவர்கள் 66,44,881 பேர். இரட்டைப் பதிவு கொண்டவர்கள் 3,39,278 பேர். மொத்தமாக 97,37,832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் 40,04,694 வாக்காளர்கள் இருந்தனர். எஸ்ஐஆர் திருத்தத்திற்கு பிறகு, 25,79,676 பேர் உள்ளனர். இதில் 14,25,018 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 12,47690, பெண் வாக்காளர்கள் 13,31,243, மூன்றாம் பாலின வாக்காளர்கள் 743 என மொத்தம் 25,79,676 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டிருப்பவர்கள் தங்கள் பகுதியில் உள்ள பி.எல்.ஓ.க்களை அணுகலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார். படிவம் 6-ஐ பெற்று பெயரைச் சேர்க்க விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். இதற்கு ஜனவரி 18ஆம் தேதி வரை அவகாசம் உள்ளது. பிப்ரவரி 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியில் வெளியிடப்படும்.