கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விழுக்காடு அதிகம் – ஸ்டாலின் வாய்க்கு பூட்டு போட்ட செங்கோட்டையன்...

First Published May 12, 2017, 1:52 PM IST
Highlights
this year pass percentage is higher than last year


சட்டப்பேரவையில் மட்டும் ஸ்டாலின் தனது கருத்தை தெரிவிக்கட்டும் என்றும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விழுக்காடு அதிகரித்திருப்பது சாதனை என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. தமிழகத்தில் தற்போது பிளஸ் 2 தேர்வு முறையை, ரேங்க் நிலையில் இருந்து கிரேடு நிலைக்கு தமிழக அரசு மாற்றியுள்ளது.

இது வெறும் அறிவிப்பு மட்டுமே தவிர, இதில் ஒரு சாதனையும் அரசு செய்யவில்லை என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், பல அரசு பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று இருக்கலாம். ஆனால், கல்வியின் தரம் உயர்ந்துள்ளது என கூறமுடியாது.

படிப்பினால், மாணவர்களின் தரம் மட்டுமே உயரும். கல்வியின் தரம் உயரவில்லை. என குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கல்வித்துறையில் சிறப்பான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வரும் கல்வித்துறையில் இந்தியாவிலேயே இல்லாத திட்டங்கள் கொண்டு வரப்படும்.சட்டப்பேரவையில் மட்டும் ஸ்டாலின் தனது கருத்தை தெரிவிக்கட்டும்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விழுக்காடு அதிகரித்திருப்பது சாதனை.

இவ்வாறு அவர் கூறினார்.

click me!