சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் கோபுரத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளி தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் விபத்து
ஆடி மாதத்தையொட்டி பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் பராமரிப்பு பணியானது நடைபெற்றது. இந்த பணியில் சென்னை கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த பழனி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். நேற்று இரவு கோயில் கோபுரத்தில் ஏறியவர் திடீரென கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பழனிக்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுய நினைவை இழந்துள்ளார். உடனடியாக கோயில் நிர்வாகத்தினர் மற்றும் அவருடன் பணியாற்றியவர்கள் மருத்துவமனைக்கு பழனியை கொண்டு சென்றனர்.
தலையில் காயம்- தொழிலாளி பலி
பழனிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பழனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து பழனியின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக திருவான்மியூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் பக்தர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
2 சவரன் நகைக்காக மூதாட்டியின் உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தம்பதி