இந்துகளுக்கு தீபம் ஏற்ற உரிமை இல்லையா..? தன்னையே மாய்த்து கொண்ட மதுரை இளைஞரின் விபரீத முடிவு..

Published : Dec 19, 2025, 07:58 AM ISTUpdated : Dec 19, 2025, 08:00 AM IST
Suicide

சுருக்கம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதியின் தீர்ப்பை அமல்படுத்த மறுக்கும் தமிழக அரசுக்க கண்டனம் தெரிவிக்கும் வகையில் இளைஞர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் தர்கா அருகே அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் தீர்ப்பை நிறைவேற்றும் பட்சத்தில் மதக்கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டும் தமிழக அரசு தீபம் ஏற்ற மறுப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. விசாரணையில், தர்கா அருகே அமைந்திருப்பது தீபத்தூண் கிடையாது எல்லைக்கல் என தமிழக அரசும், அந்த தூண் தர்காவுக்கு சொந்தமானது என தர்கா நிர்வாகமும் வாதிட்டு வருகிறது. ஆனால் அது தீபத்தூண் தான் என்பதற்கான ஆதாரங்களை இந்து அமைப்புகள் முன்வைத்து வருகின்றன.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பூர்ணச்சந்திரன் என்ற வாலிபர் தமிழக அரசின் நடடிவக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இளைஞரின் தற்கொலை தொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, “மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தடை செய்த திமுக அரசைக் கண்டித்து, மதுரை மாநகர் நரிமேடு பகுதியை சேர்ந்த தீவிர முருக பக்தர், சகோதரர் திரு. பூர்ண சந்திரன், தீக்குளித்து உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

 

 

வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றங்களின் மீது நம் அனைவருக்கும் முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், இது போன்ற வருந்தத்தக்க முடிவை, சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் எடுத்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. ஒவ்வொருவரும், அவர்களது குடும்பத்தினருக்கு முக்கியம். இது போன்ற முடிவுகள், எப்போதும், எதற்காகவும் வேண்டாம் என்று அனைவரிடமும் பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன்.

சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தருமாறு, மதுரை பாஜக சகோதரர்களைக் கேட்டுக் கொள்கிறேன். சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் ஆன்மா, முருகன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தமிழகத்தில் 88 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்..? இன்று வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்..!
ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!