
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவின் காவலாளி கொலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து, ஜெயலலிதான் முன்னாள் கார் டிரைவரும் விபத்தில் சிக்கி பலியானார். தொடர் இறப்பு சம்பவங்களால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
மேலும் கொடநாடு பங்களாவில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக போலீசார் சிலரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து சில கை கடிகாரங்கள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வந்தன.
ஆனால், கைப்பற்றப்பட்ட கை கடிகாரங்கள் போலீசார் வெளியிடவில்லை என எஸ்பி மறுப்பு தெரிவித்துள்ளார். நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி செய்தியில் காட்டப்பட்ட பொருட்கள் ஜெயலலிதாவுக்கு சொந்தமானது இல்லை என எஸ்பி முரளி ரம்பா கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே போலீசார் கைப்பற்றிய கை கடிகாரங்கள் ஜெயலலிதாவுக்கு சொந்தமானது இல்லை என அதிமுகவினர் தெரிவித்தனர். இதை வைத்து கொண்டு போலீசார் மறுப்பதாக தெரிகிறது.
மேலும் இந்த வழக்கில் முக்கிய பிரமுகர் ஒருவரின் தலையீடு இருப்பதாகவும், அவர்தான் கொடநாடு சம்பவங்கள் மற்றும் சாலை விபத்துக்களுக்கு காரணமாக இருக்கலாம் என அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.
முன்னதாக கொடநாடு பங்களாவில் வைக்கப்பட்டு இருந்த அலங்கார பொருட்களை கைப்பற்றியதாக தெரிகிறது. அங்குள்ள ஒரு அறையில் திருடிய கை கடிகாரங்களை கேரள ஆற்றில் கொள்ளையர்கள் வீசியதாகவும், அவற்றை கைப்பற்ற முடியவில்லை எனவும் போலீசார் தெரிவித்தனர்.
ஆனால், போலீசார் கைப்பற்றிய கை கடிகாரங்கள் ஜெயலலிதா அணிந்ததே இல்லை என அதிமுகவினர் அடித்து கூறுகின்றன. இதனால், செய்தியில் வெளியான படங்களை போலீசார் வெளியிடவில்லை என தெரிவித்துள்ளார்.
கொடநாடு சம்பவத்தில் போலீசாரே முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிப்பதால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.