விஸ்வரூபம் எடுக்கும்  பூனைக்கறி விவகாரம்...! அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீஸ்...!

 
Published : Feb 10, 2018, 05:01 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
விஸ்வரூபம் எடுக்கும்  பூனைக்கறி விவகாரம்...! அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீஸ்...!

சுருக்கம்

There is a separate set of cat sellers in Chennai.

சென்னையில் பூனைக்கறி விற்பவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பூனைக்கறி விற்பவர், அதை வாங்கும் கடைக்காரர் உள்ளிட்டோரை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் காக்கா பிரியாணி விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து ஆட்டுக்கறி எனக்கூறி நாய்கறி விற்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இதனால் அசைவ பிரியர்கள் பலர் சாலையோர கடைகளில் சிக்கன் மட்டன் பிரியாணி சாப்பிட பெரும் அச்சமடைந்தனர்.

இந்நிலையில், பிரியாணிப் பிரியர்களை மீண்டும் பீதியடைய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சென்னை மற்றும் சென்னையை ஒட்டியுள்ள  பெரும்பாலான ஹோட்டல்களில் மட்டன் பிரியானி எனக்கூறி பூனைக்கறி கலந்து பிரியாணி போடப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

சென்னையில், கடந்த சில சென்னை மயிலாப்பூர், அண்ணாநகர், கோட்டூர்புரம், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் சுற்றித்திரிந்த பூனைகள் நடமாட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது வீடுகளிலும் வழக்கப்பட்ட பூனைகள் திடீரென காணமல் போனதால் சந்தேகத்தை எழுப்பியது. இந்நிலையில் சென்னை செங்குன்றம், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் மட்டன் பிரியானி எனக்கூறி பூனைக்கறி பிரியானி பரிமாறப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த பகுதிகளில் ஒரு டீம் ஹோட்டல்களுக்கு சாப்பிட செல்வதை போல சென்ற போலீசார் பூனை சப்ளை செய்ய வந்த கும்பலை கைது செய்துள்ளது

இதில் பூனை சப்ளை செய்த கும்பல் செங்குன்றத்தில் தங்கியிருக்கும் நாடோடிகள் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தங்கியிருந்த இடத்தில் சோதனை செய்த போலீசார் சாக்குமூட்டையில் கட்டப்பட்டிருந்த 35  பூனைகள் பறிமுதல் செய்தனர்.  அவற்றில் 4 பூனைகள் இறந்துக் கிடந்ததாம். ஆட்டுக்கறி விலை கிலோ 600 ரூபாய்க்கு மேல் விற்பதால் கிலோ 100 ரூபாய்க்கு விற்கும் பூனைக்கறியை வாங்கி சமைத்து லாபம் அடைய ஹோட்டல்களும் விரும்புகிறதாம். 

சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் சாலையோர ஹோட்டல்கள், பெரிய ஹோட்டல்களிலும் பூனைக்கறியை கலந்து மட்டன் பிரியாணி செய்வதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் பூனைக்கறி விற்பவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பூனைக்கறி விற்பவர், அதை வாங்கும் கடைக்காரர் உள்ளிட்டோரை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

சுழன்று அடிக்கப்போகும் சூறாவளிக்காற்று.! மீனவர்களுக்கு எச்சரிக்கை.! மழை எப்போது? வானிலை மையம் முக்கிய அப்டேட்
விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?