உயிருடன் கரை ஒதுங்கும் கடற்பாம்புகள்...! என்ன நடக்கிறது கடலில்...? அச்சத்தில் மீனவர்கள்...!

Asianet News Tamil  
Published : Apr 22, 2018, 05:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
உயிருடன் கரை ஒதுங்கும் கடற்பாம்புகள்...! என்ன நடக்கிறது கடலில்...? அச்சத்தில் மீனவர்கள்...!

சுருக்கம்

The seaweed secluded from the shore alive.

பொதுவாக கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டால், ஆமைகள், டால்பின் மீன்கள், திமிங்கிலம் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் கடற்கரையை நோக்கி தவறுதலாக வந்து விடும். அதனை மீனவர்கள் மீண்டும் கடலில் சென்று விடுவர். 

சில சமயங்களில் படகுகளில் அடிப்பட்டு அவை இறந்த நிலையிலும் கரை ஒதுங்குவது உண்டு. ஆனால் கடல் கரையில் கடல் பாம்புகள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதே சற்று அரிது தான். 

இந்நிலையில் மாமல்லபுரம் கடற்க்கரையில் அதிக அளவில் கடல் பாம்புகள் இறந்த நிலையிலும் உயிருடனும் கரை ஒதுங்கி உள்ளதாக கூறுகின்றனர் அந்த பகுதி மீனவ மக்கள். 

இது குறித்து அந்த பகுதி மீனவ மக்கள் கூறுகையில், "கடந்த இரண்டு நாட்களாக உயிருடன் கடற்பாம்புகள் அதிக அளவில் இங்கு கரை ஒதுங்குகின்றது. அது ஏன் என தெரியவில்லை? இதனால் கடலில் என்ன மாற்றம் ஏற்படுகிறது என தெரியவில்லை என்றும் வழக்கத்தை விட தற்போது அலைகள் அதிக அளவில் எழும்புவதாகவும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

ஜோதிமணி மீது நடவடிக்கை பாயுமா? செல்வபெருந்தகையின் 'அடடே' விளக்கம்!
2026ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பெரும் மாற்றம் இருக்கும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி