அச்சச்சோ.. 3 நாட்கள் ரேஷன் கடைகள் இயங்காது.! அரசு ஊழியர்கள் திடீர் போராட்டம்.!

By Raghupati RFirst Published May 23, 2022, 9:49 PM IST
Highlights

Ration Shop : தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று நியாயவிலை கடை ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். 

அகவிலைப்படி உயர்வு :

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதி அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. அதனால் இதனை கண்டித்து ரேஷன் கடை ஊழியர்கள் வருகிற ஜூன் 7 முதல் 10ம் தேதி வரை சென்னையில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த கொரோனா தடுப்பு பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டியிருந்தது. 

அதனால் அரசுக்கு கூடுதலான செலவினம் ஏற்பட்டது. அதன் காரணமாக அரசுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு ஊழியர்களுக்கு கடந்த 2020ம் ஆண்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு வழங்கியது. இதனை தொடர்ந்து மீண்டும் ஜூலையிலும் 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது.

அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் 31% அகவிலைப்படியை பெற்று வந்தனர். அதனால் தமிழக அரசு ஊழியர்கள் மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். அதன்படி தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 17 சதவிகிதத்தில் இருந்து 31 சதவிகிதமாக அரசு உயர்த்தி வழங்கியது. ஆனால் அதே சமயம் இந்த அகவிலைப்படி உயர்வு ரேஷன் கடை ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. 

அரசு ஊழியர்கள் போராட்டம் :

தங்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று நியாயவிலை கடை ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நாகையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்க போராட்டக்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கு.பாலசுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், 'ஜூன் 10-ந் தேதி மாநிலம் முழுவதும் பணியாளர்களைத் திரட்டி, சென்னையில் தமிழக முதல் அமைச்சரை சந்திப்பதற்கான காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தோடு இணைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஜூன் மாதம் 7,8,9 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று கூறினார். 

இதையும் படிங்க : அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்..? வெளியே கசிந்த தகவல்.! வேட்பாளர்கள் இவர்களா ?

இதையும் படிங்க : திமுகவுடன் கூட்டணி வச்சது பெரிய தப்பு..என்ன பண்றது.! புலம்பும் கே.எஸ் அழகிரி !

click me!