Curfew Cancelled TN :கவனத்திற்கு.. முழு ஊரடங்கு ரத்து.. மெட்ரோ இரயில் சேவையில் மாற்றம்.. அறிவிப்பு வெளியானது..

By Thanalakshmi VFirst Published Jan 28, 2022, 2:34 PM IST
Highlights

சென்னையில் வார நாட்களில் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு அதிகரிப்பு காரணமாக கொரோனா ஊரடங்கில் பல்வேறு கட்டுபாடுகள் கொண்டுவரப்பட்டன.இந்த நிலையில் ஜனவரி 31 ஆம் தேதி அன்று கொரோனா ஊரடங்கு முடிவடையும் நிலையில் மேற்கொண்டு ஊரடங்கு விதிப்பது குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. ஆலோசனை கூட்ட முடிவில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைந்த வரும் நிலையில் சில தளர்வுகளுடன் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உத்தரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதன்படி, பிப்ரவரி 1 தேதி முதல் 1 முதல் 12 வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது. அதே போல், அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைகழகங்கள், கல்லூரிகள்,தொழில் பயிற்சி மையங்கள் உள்ளிடவை திறக்க அனுமதியளிக்கப்பட்டது. இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ரத்துசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு கிடையாது. மேலும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கும் கிடையாது.

மேலும் உணவகங்கள், உறைவிடங்கள், தங்கும் விடுதிகள், அடுமணைகள்,தியேட்டர், கேளிக்கை மற்றும் பொழுதுப்போக்கு பூங்காக்கள், ஜவுளி மற்றும் நகைக்கடைகள், யோகா மையங்கள், உடற்பயிற்சி கூடங்கள்,உள் அரங்கு நிகழ்ச்சிகள் உள்ளிடவை 50% பேருடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் கலைநிகழ்ச்சி, பொருட்காட்சி போன்றவை நடத்த தடை தொடர்கிறது. அரசு, சமுதாய,கலாச்சார கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கை ரத்து செய்துள்ள நிலையில் இனி வார நாட்களான திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 5.30 மணி முதல் இரவு 11.00 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நெரிசல்மிகு நேரங்களில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் 5 நிமிட இடைவெளியில் ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் ரயில் இயக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம்போல காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!