”பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க வேண்டும்” - தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் திருமா...!!!

 
Published : Aug 29, 2017, 04:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:07 AM IST
”பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க வேண்டும்” - தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கும் திருமா...!!!

சுருக்கம்

The LTTE leader Thirumavalavan has demanded that seven persons who have been sentenced to jail in Rajiv Gandhi murder case should be released on good grounds.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை நல்ல எண்ணங்களின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ராஜீவ்காந்த் கொலை வழக்கில் கடந்த 1991 ஆம் ஆண்டு பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். 26 ஆண்டுகள் சிறை வாசத்திற்கு பிறகு பரோலில் விடுதலை ஆகியுள்ளார். 

பேரறிவாளனின் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் அவரை கவனித்து கொள்ள பேரறிவாளனுக்கு 1 மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் போராட்டத்திற்கு பிறகே இந்த பரோல் கிடைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஒரு மாதமும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ள கூடாது, வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது, போலீசாரிடம் தினமும் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் பரோல் வழங்கப்பட்டுள்ளது. 

இதைதொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் பேரறிவாளனை சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். 

இந்நிலையில், இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேரறிவாளனை அவரது வீட்டிற்கு சென்று பார்த்து ஆறுதல் கூறினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை நல்ல எண்ணங்களின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என  தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். 

PREV
click me!

Recommended Stories

தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்..! அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் ஐக்கியம்! விஜய் குஷி!
இந்து கோயிலை இடிக்க தீர்ப்பு கொடுக்க கோர்ட் வேண்டும்..! தீபம் ஏற்றச்சொன்னால் கோர்ட் வேண்டாமோ? அண்ணாமலை ஆவேசம்..!