
திருவண்ணாமலை அருகே பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அருகே உள்ள கீழ் நேத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் விவசாயி ஆனந்தன். இவர் இன்று காலை வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுள்ளார். பின்னர், இன்று மதியம் வீடு திரும்பியுள்ளார். அப்போது பூட்டியிருந்த வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியுற்றார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 18 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும் ரூ. 1.80 லட்சமும் கொள்ளை போயிருந்தது.
இதையடுத்து ஆனந்தன் இதுகுறித்து தூசி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தகவலறிந்து வந்த போலீசார் இந்த கொள்ளை குறித்து வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் நடைபெற்றுள்ள இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.