
விழுப்புரம்
விழுப்புரத்தில் விவாகரத்து தர மறுத்ததால் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்தது.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகேயுள்ள தி.அத்தப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த அழகேசன் மகன் வசந்தி (25). இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளி.
இவருக்கும், வடமருதூரைச் சேர்ந்த டிராக்டர் ஓட்டுநரான தங்கராசும் (27) கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தங்கராசு தனது மாமானார் அழகேசன் வீட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்தார்.
இந்த நிலையில், தங்கராசுக்கும் வடமருதூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டதை அறிந்த வசந்தா, கணவரைக் கண்டித்துள்ளார்.
இதனையடுத்து, வசந்தாவை விவாகரத்து செய்ய தங்கராசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டார். கடந்த 7.8.2016-அன்று வசந்தாவை மிரட்டி விவாகரத்து விண்ணப்பத்தில் கையொப்பமிடுமாறு மிரட்டினராம். இதற்கு சம்மதிக்காத வசந்தா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தங்கராசு தீவைத்து எரித்துள்ளார்.
இதில், பலத்த காயமடைந்த வசந்தாவை உறவினர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மணலூர்பேட்டை காவலாளர்கள் வழக்குப் பதிந்து தங்கராசுவை கைது செய்தனர்.
பின்னர், விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் தங்கராசுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜீலியட் புஷ்பா நேற்று தீர்ப்பு அளித்தார்.