மணிக்கணக்காக ஆசிரியைக்கு குடை பிடித்த மாணவி: சர்ச்சையில் சிக்கிய அரக்கோணம் பள்ளி!

First Published Aug 6, 2018, 12:13 PM IST
Highlights

விளையாட்டுப்போட்டியின்போது வெயில் தாங்காமல் தவித்த ஆசிரியைக்கு மணிக்கணக்கில் மாணவி குடை பிடித்தது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி விளக்கமளிக்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

விளையாட்டுப்போட்டியின்போது வெயில் தாங்காமல் தவித்த ஆசிரியைக்கு மணிக்கணக்கில் மாணவி குடை பிடித்தது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி விளக்கமளிக்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மண்டல அளவிலான 'கோ கோ' விளையாட்டுப்  போட்டிகள் நடந்துள்ளன. இதில் வேலூர் மாவட்ட பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் கலந்துகொண்டு விளையாடினர்.

இந்தப்போட்டிகள் குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாயின. அப்போது தொலைக்காட்சி செய்திகளில் ஒளிபரப்பான காட்சிகளில் ஆசிரியை ஒருவருக்கு மாணவி ஒருமணி நேரத்துக்கு மேலாகக் குடை பிடித்துக் கொண்டிருக்கும் காட்சி இருந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இது மாவட்ட ஆட்சியர் வரை சென்றுள்ளது. அதைப்பார்த்த வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், உடனடியாக மாவட்ட கல்வி அதிகாரிகள் தனக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், " மாணவியை குடைபிடிக்க வைத்த ஆசிரியை பணியாற்றும் பள்ளி அரக்கோணத்தில் உள்ள சிஎஸ்ஐ மத்திய மேல்நிலைப்பள்ளி. அந்தப்பள்ளி அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்  என்று அந்தப்பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளேன்." என்று தெரிவித்துள்ளார். அண்மைக்கலமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பல்வேறு சர்ச்சை சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றன. இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது. பள்ளிகளை சுத்தம் செய்ய  வைத்தல், கழிப்பறையை கழுவ வைத்தல் என்று பல வேலைகள் செய்ய மாணவ மாணவிகள் கட்டயப்படுத்தப்படுவதாக பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நிலையில், வேலூர் சி எஸ் ஐ பள்ளி சர்ச்சையில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!