இனி இந்த ஆண்டில் மழையே இல்லையாம்...! கன்ஃபார்ம்-ஆ சொல்லும் வெதர்மேன்..!

First Published Dec 23, 2017, 5:36 PM IST
Highlights
Tamilnadu Weatherman said that this year will not rain again but it will continue till the month of January.


இந்த ஆண்டில் இனி மழைகிடையாது எனவும் ஆனால் கீழைக்காற்று வருகிற ஜனவரி மாதம் வரையில் தொடரும் நிலை உள்ளது எனவும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். 

கடந்த மாதம் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை வரும் டிசம்பர் 31 தேதியுடன் முடிவடைகிறது. 

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ஆண்டு இனி மழை கிடையாது எனவும் ஆனால் கீழைக்காற்று வரும் ஜனவரி மாதம் வரையில் தொடரும் நிலை உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

வரும் டிசம்பர் 31 தேதி வரையில் மட்டுமே வடகிழக்குப் பருவமழைக் காலம் நீடிக்கும் எனவும் இந்த ஆண்டு பருவமழை போதுமானதாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

இந்த மழையால் சென்னையில் தண்ணீர் பிரச்சனை இருக்காது எனவும் இந்த ஆண்டு திருநெல்வேலியில் அதிகபட்சமாக 48 சதவீத மழைப்பொழிவு காணப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். 

குறைந்தபட்சமாக திருவண்ணாமலையில் 20 சதவீதம் மழைப்பொழிவு காணப்பட்டது எனவும் வெதர்மேன் தெரிவித்துள்ளார். 

click me!