உருவானது புதிய மேலடுக்கு சுழற்சி... 20ம் தேதிக்கு பிறகு மழை!

Published : Dec 18, 2018, 09:51 AM IST
உருவானது புதிய மேலடுக்கு சுழற்சி... 20ம் தேதிக்கு பிறகு மழை!

சுருக்கம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தமட்டில் 20ம் தேதி வரை, பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். சென்னை மற்றும் புறநகரிலும் இதே நிலை தான் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தமட்டில் 20ம் தேதி வரை, பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். சென்னை மற்றும் புறநகரிலும் இதே நிலை தான் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் அறிவிப்பில் கூறியிருப்பதாவது.

 

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய பெய்ட்டி புயல், ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நேற்று மதியம் கரையை கடந்தது. இதனால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தமட்டில் 20ம் தேதி வரை, பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். சென்னை மற்றும் புறநகரிலும் இதே நிலை தான் காணப்படும்.

இதன் பின்னர் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் வாய்ப்புள்ளது. அதன் நகர்வை பொறுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

‘பெய்ட்டி’ புயல் தமிழகத்தை கடந்து சென்றபோது வட திசையில் இருந்து நிலப்பகுதி காற்று வீசியது. இதனால், குளிர் கடுமையாக இருந்தது. இதனால் பகல்நேர வெப்பநிலை இயல்பை விடவும் 4 டிகிரி செல்சியஸ் குறைவாக இருந்தது. சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக பகல் நேர வெப்பநிலை 25.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. இது இயல்பை விடவும் 3.6 டிகிரி செல்சியஸ் குறைவு ஆகும்.

PREV
click me!

Recommended Stories

நேற்று ரூ.800 குறைந்த தங்கம்.. இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? நகை வாங்க இதுதான் சரியான நேரமா?
போட்டி போடும் தக்காளி, வெங்காயம்.. பை பையாக அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்.! ஒரு கிலோ இவ்வளவு தானா.?