Bus Strike: போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது! பொதுமக்கள் அவதி!!

By vinoth kumar  |  First Published Jan 9, 2024, 6:43 AM IST

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 6  அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர். 


தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து அறிவித்தப்படி வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இதனால், பேருந்துகள் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். 

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், பணியில் மரணமடைந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், ஓய்வூதியர்களின் நிலுவையை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6  அம்ச கோரிக்கையை வலியுறுத்தி  சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க பேரவை உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஜனவரி 9ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருந்தனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- பொங்கல் விழா.. சென்னையில் இருந்து 11,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர் அளித்த தகவல்!

இதனையடுத்து தொழிலாளர் நல இணை ஆணையர் தலைமையில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த டிசம்பர் 27ம் தேதியும், ஜனவரி 3ம் தேதியும் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு எட்டப்படாததால் நேற்று மீண்டும் முத்தரப்பு சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு எட்டப்பாடாததால் திட்டமிட்டப்படி வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர். போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் வழக்கமான அளவில் இயக்கப்படவில்லை. இதனால் வெளியூர்களுக்கு குறைவான எண்ணிக்கையிலேயே பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதையும் படிங்க;-  வேலை நிறுத்தம் மக்களை கடுமையாக பாதிக்கும்: முதல்வர் நேரடியாக பேச வேண்டும் - அன்புமணி கோரிக்கை

திருவண்ணாமலையில் இரவு  11 மணி அளவில் அரசு பேருந்துகள் இயக்கம் 80 சதவீதம் முடங்கியது. பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டதால் பக்தர்கள் பேருந்து நிலையத்தில் தூங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். இதேபோல் பல்வேறு இடங்களிலும் போதுமான பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றே பொதுமக்கள் கூறி வருகின்றனர். 

click me!