மக்களுக்கு குட் நியூஸ்.. இனி தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

Published : Jan 31, 2022, 06:06 AM IST
மக்களுக்கு குட் நியூஸ்.. இனி தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

சுருக்கம்

தமிழகத்தில் இனி மின்வெட்டு இருக்காது என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதற்காக, அந்த பணி நடக்கும் இடங்களில் உள்ள மின் இணைப்புகளில், காலை முதல் மாலை வரை, மின் வினியோகம் நிறுத்தப்படும். 

இந்த விபரம், மின் வாரியம் சார்பில் பொது மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பிப்., 19-ல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதனால், மாநிலம் முழுதும் எந்த இடத்திலும் மின் தடை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு பொறியாளர்களை, மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக தேர்தல் முடியும் வரை, மின் சாதனங்களில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிக்கான மின் தடை நிறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மின் தடை அறிவிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது அறிவிக்கப்படாத மின் தடை பற்றிய புகார்களுக்கு 1912 என்ற எண்ணுக்கு அழைத்து எப்போது வேண்டுமானாலும் புகாரளிக்கலாம். அதுமட்டுமின்றி 9445850811 என்ற வாட்ஸ்அப் எண் மற்றும் 044-28521109, 044-28524422 என்ற தரைவழி எண்களிலும் தொடர்புகொண்டு புகாரளிக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்கள்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!
நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்