பொங்கல் பரிசுத் தொகுப்பு.. அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு - என்னவெல்லாம் இருக்கும்? முழு விவரம் இதோ!

By Ansgar RFirst Published Jan 2, 2024, 11:19 PM IST
Highlights

Pongal Gift Package : இந்த புதிய 2024ம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், விரைவில் தமிழர்களின் திருநாளாம் தை திருநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அறிவித்துள்ளது.

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, இந்த 2024ம் ஆண்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கைத் தமிழர் மறு வாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படும் என்றும், அதற்கு ஆகவிருக்கும் செலவு குறித்தும் தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது. 

பொங்கல் பரிசுத் தொகுப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழுக் கரும்புடன் கூடிய தொகுப்பு வழங்கிடதமிழக அரசு முடிவு செய்துள்ளது. 31.10.2023 அன்றைய தேதி நிலவரப்படி, 2,19,57,402 எண்ணிக்கையிலான குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிடும் பட்சத்தில் தோராயமாக ஒரு குடும்பத்திற்கு ரூ.238 செலவிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Latest Videos

இருநூற்று முப்பத்து எட்டு கோடியே, தொண்ணூற்று இரண்டு இலட்சத்து, எழுபத்து இரண்டாயிரத்து எழுநூற்று நாற்பத்து என்ற அளவுக்கு செலவினம் ஏற்படும் என்றும், தமிழக அரசு அதற்காக நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

சிறு குறு நிறுவனங்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் முதல்வர் ஸ்டாலின்: அண்ணாமலை விமர்சனம்

click me!