தமிழக மீனவர்கள் 8 பேர் கைது… இலங்கை கடற்படையினர் அட்டூழியம்!

By vinoth kumar  |  First Published Dec 17, 2018, 10:00 AM IST

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேரை, இலங்கை படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.


எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேரை, இலங்கை படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று அதிகாலையில், தமிழக மீனவர்கள் 8 பேர்  படகில் மீன் பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே இன்று அதிகாலையில், அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை படையினர், அவர்களை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர்.

Tap to resize

Latest Videos

 

பின்னர், அவர்களை கைது செய்த இலங்கை படையினர், படகுகளையும் பறிமுதல் செய்து காரை நகர் துறைமுகத்துக்கு அழைத்து சென்றனர். மேலும், 8 மீனவர்களும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் கைது மற்றும் மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

click me!