மீனவர்களை கண்டுபிடிக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து அரசுக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்...

 
Published : Dec 19, 2017, 06:59 AM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
மீனவர்களை கண்டுபிடிக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து அரசுக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்...

சுருக்கம்

Students of Government College protest against Central and State governments who did not find fishermen ...

நாகப்பட்டினம்

காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மன்னார்குடி அரசுக் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகப்பட்டினம் மாவட்டம், மன்னார்குடி அரசுக் கல்லூரி மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து வகுப்புகளைப் புறக்கணித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களையும், அண்மையில் தாக்கிய ஓகி புயல் பாதிப்பால் காணாமல்போனவர்களையும் கண்டுபிடிக்காமல் மத்திய, மாநில அரசுகள் மெத்தனப் போக்குடன் நடந்து கொள்கிறது.

எனவே, மத்திய அரசையும், அதனை வலியுறுத்தாத மாநில அரசையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கல்லூரி நுழைவு வாயில் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் பி.லோகேஷ் தலைமைத் தாங்கினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று மத்திய, மாநில அரசுக்கு எதிரான தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

தேர்வர்களுக்கு இலவச பயிற்சி.! ரூ.5000 அள்ளிக்கொடுக்கும் அரசு.! இன்றே கடைசி நாள்! விண்ணப்பிப்பது எப்படி?
எடப்பாடி பழனிசாமி ரொம்ப நேர்மையானவர்.. திமுக அரசே சர்டிபிகேட் கொடுத்துடுச்சு..! ஆர்ப்பரிக்கும் அதிமுக..!