நான்கு தங்கப்பதக்கங்கள் வென்ற மாணவன்…

 
Published : Oct 18, 2016, 01:28 AM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
நான்கு தங்கப்பதக்கங்கள் வென்ற மாணவன்…

சுருக்கம்

 

செய்யாறு கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் 4 தங்கப் பதக்கம் வென்ற பல்லாந்தாங்கள் ஜம்புமகரிஷி வன்னியர் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்து வரும் ஆரணி மாணவரை பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

செய்யாறு கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் நடைபெற்றன. இதில், ஆரணி அடுத்த பல்லாந்தாங்கள் ஜம்புமகரிஷி வன்னியர் மெட்ரிக்குலேஷன் பள்ளிமாணவர்கள் ஜூனியர் பிரிவில் (14 வயதுக்கு உள்பட்டோர்) கலந்துகொண்டனர்.

இதில், 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய 4 போட்டிகளில் பங்கேற்ற மாணவர் வி.விஜயரங்கன் முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.  

மேலும், இவர் ஜூனியர் பிரிவில் தனிநபர் விருதும், சாம்பியன் பட்டமும் பெற்றார்.

இதேபோல், இந்தப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கோ-கோ போட்டியில் 14 வயதுக்கு உள்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை ஜம்புமகரிஷி வன்னியர் மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர் நாராயணசாமி, தலைவர் ச.ஏழுமலை, நிர்வாகிகள் ஏ.சேட்டு, ஆர்.சங்கர், ஆர்.பி.ராமன், ஏ.ரவி, ஜெ.ஞானசேகர், உடற்கல்வி ஆசிரியர் ஜி.வேல்முருகன் ஆகியோர் பாராட்டி, பரிசு வழங்கினர்.

மேலும், இந்த மாணவர்கள் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!