
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் மட்டுமே போராடிய மாணவர் இயக்கத்துக்குள் கண்ட அமைப்புகள் புகுந்து போராட்டத்தை கைவிட மறுக்கின்றன என நடிகர் ராகவா லாரன்ஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
வெற்றியை கொண்டாட 500 கிலோ கேக்குடன் வந்த எனக்கு ஏமாற்றம் என்று கூறியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
சாப்பாடு கொடுக்க வந்த எனக்கு ரொம்ப சந்தோஷம் எல்லோருடைய எண்ணம் என்னங்க ஜல்லிக்கட்டு நடக்கணும். பாரம்பரியத்தை விட்டுகொடுக்க கூடாது. சோ வந்தோம். ஸ்டூண்ட்ஸ் வந்தாங்க அவங்க பங்களிப்பு மிகப்பெரிய உலகலவில் பேச வைத்தது. அது மிக பெரிய அளவில் பரவியது.
நம்ம நோக்கம் என்ன ஜல்லிக்கட்டு நடக்கணும் . வெற்றிகரமா நடக்கணும். அதுக்காக் கோரிக்கையை அரசாங்கத்திடம் வைத்தோம். ஸ்டூடண்ட்ஸ் கிட்ட இருக்கிற வரைக்கும் இந்த போராட்டம் நல்லா போச்சுங்க.
அரசாங்கம் என்ன செஞ்சாங்க டெல்லிக்கு போனாங்க. அவசரச சட்டம் கொண்டு வந்ததா சொன்னாங்க, எல்லஓரும் ஏத்துக்கிடோமா? நிரந்தர சட்டம் ஏற்படுகிற வரைக்கும் உறுதியா இருந்தோம். ஸ்டூடன்ஸ் இருக்கிறப்வ் அரை சரியா இருந்துச்சி சார். அதற்கு பிறகு யார் யார் எந்தெந்த அமைப்புகளோ உள்ள புகுந்துட்டாங்க.
இடையில் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. காலையில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்து வருகிறோம். ஸ்டூடண்ட்ஸ் பண்ண மாட்டாங்க. அவங்கள பய்ஹ்தி எனக்கு தெரியும் . ஆனால் வேற வேற அமைப்புகள் என்னென்னமோ செய்றாங்க. இதை ஆரம்பித்த சில மாணவ்ர்கள் இவர்கள் தான்.
காலியில் நிரந்தர தீர்வு கிடைத்து விட்டது, கவர்னர் சைன் பண்ணிட்டார் என்று தெரிந்து இந்த சந்தோஷமான செய்தியை சொல்ல உள்ளே வந்தேன். இந்த சந்தோஷத்தை சொல்ல 500 கிலோ கேக் ஆர்டர் செய்து சந்தோஷ்மாக சொல்ல கடலுக்குள் இருப்பவர்களை பார்க்க சென்றேன்.
சொன்னேன் சார்.ஸ்டூடண்ட்ஸ் அமைதியா கேட்டுகிட்டிருக்கும்போதே சமபந்த சம்பந்தமில்லாத ஆட்கள் இது வேணும் அது வேணும்னு சொல்றாங்க .
சார் எங்க கோரிக்கை அது இல்லை ஜல்லிக்கட்டு நிரந்தரமாகணும் என்பது தான். நிரந்தரமானதை எஞ்ஜாய் பண்ணணும் , முதல்வர் ஐயா , பிரதமர் ஐயாவுக்கு நன்றி சொல்லிக்கிறேன். சட்டம் கொண்டு வந்து ஓக்கே ஆயிடுச்சுன்னு சொல்றாங்க.
ஸ்டூடன்ஸ் கிட்ட சொல்லி ஜாலியா எஞாய் செய்யணும். இது தப்பா இருக்கு சார் . வேற வேற அமைப்புகள் எல்லாம் இருக்கு சார். அவங்க வைக்கிற வார்த்தைகள் கேட்க முடியல சார்.
கவர்னர் சைன் பண்ண காப்பி கேட்கிறாங்க,. ஸ்டூடண்ட் கேக்கிறாங்க, அதை மட்டும் பேசாமல் சம்பந்த சம்பந்தமில்லாம பேசுறாங்க சார்.
வாடிவாசல் திறந்தால் வீடு வாசல் போயிடுவோம் என்று சொன்ன நீங்கள் தான் சொன்னீர்கள் , ஆமா நாங்கத்தான் சொன்னோம்.
எங்களுக்கு காப்பி வரும்போது அதில் சைன் இல்லை சார். இப்ப இப்ப ஆயிடுச்சு. இப்ப சைன் வந்துள்ளது.
மாணவர் புரட்சி வைலன்ஸாக ஆகியுள்ளது.
வைலன்ஸாக ஆக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணிக்கு வந்து கொண்டாட நினைத்தோம். ஆனால் அதற்குள் இவ்வளவு நடந்துள்ளது. இந்த போராட்டத்தில் மாணவர்கள் கோரிக்கை நிறைவேறி விட்டது. அவர்கள் விலகி விடுவார்கள்.
மாணவர்களை தாக்கியது எனக்கு வருத்தம் தான் . வேறு சிலர் இந்த போராட்டத்தில் இருக்கின்றனர். இதுதான் பிரச்சனைக்கு காரணமே. அவசர சட்ட நகலை காண்பித்து அவர்களை அனுப்பி இருக்கலாமே?.இவ்வாறு லாரன்ஸ் பேசினார்.