கடந்த சில வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பொது போக்குவரத்து தடை விதிக்கப்பட்டிருந்தது.
ரயில்வே துறையில் பயணிகளின் வசதிக்காக பல முன்பதிவு பெட்டிகள் இயங்கி வருகின்றன. பொதுவாக அதிக தூரம் பயணம் செய்பவர்களுக்கு முன்பதிவு முறை இருந்து வந்தது. தற்போது குறைந்த தூரம் பயணம் செய்பவர்களுக்கும் முன்பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக பொது போக்குவரத்து தடை விதிக்கப்பட்டிருந்தது.
மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி வழக்கு.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் அதிரடி திருப்பம் !
பிறகு தொற்று கட்டுக்குள் வரத் தொடங்கியதால் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் ரயில் சேவைகளில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில், சிறப்பு ரயில் போன்றவைகள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. தற்போது கொரோனா முழுவதும் கட்டுக்குள் வந்துள்ளதை அடுத்து அனைத்து ரயில் சேவைகளும் செயல்பட்டு வருகிறது.சில முன்பதிவு ரயில் பெட்டிகளில் சாதாரண பயணிகளும் பயணம் செய்ய ரயில்வே நிர்வாகம் அனுமதித்துள்ளது.
குறுகிய தூரம் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக சில ரயில்களின் முன்பதிவு பெட்டிகள் ‘டிரிசர்வ்டு’ (Dereserved) பெட்டிகளாக தற்போது மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி தற்போது, சென்னை எழும்பூர் – கொல்லம் அனந்தபுரி ரயிலில் (16723) அக்டோபர் 19 முதல் எஸ் 10 மற்றும் எஸ் 11 ஆகிய முன்பதிவு பெட்டிகள் திருநெல்வேலி – கொல்லம் இடையேயும், கொல்லம் – சென்னை எழும்பூர் அனந்தபுரி ரயிலில் (16724) அக்டோபர் 20 முதல் எஸ் 11 என்ற பெட்டி கொல்லம் – திருநெல்வேலி இடையேயும் டிரிசர்வ்டு பெட்டிகளாக இயக்கப்படும்.
மேலும் செய்திகளுக்கு..தமிழகத்தில் விரைவில் உயரும் மின் கட்டணம்.. பொதுமக்கள் அதிர்ச்சி - எவ்வளவு தெரியுமா ?
தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக இயக்கப்படும் சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம் – சென்னை எழும்பூர் ரயில்களில் (16851/16852) எஸ் 12, எஸ் 13 ஆகிய பெட்டிகள் அக்டோபர் 24 முதல் மானாமதுரை – ராமேஸ்வரம் இடையேயும் அக்டோபர் 26 முதல் ராமேஸ்வரம் – மானாமதுரை இடையேயும் டிரிசர்வ்டு பெட்டிகளாக இயக்கப்படும்.
அதேபோல தூத்துக்குடி – மைசூர் ரயிலில் (16235) அக்டோபர் 28 முதல் எஸ் 10 மற்றும் எஸ் 11 ஆகிய முன்பதிவு பெட்டிகள் டிரிசர்வ்டு பெட்டிகளாக இயக்கப்படும்.இந்த டிரிசர்வ்டு ரயில் பெட்டிகளில் பயணம் செய்ய புதிய சிறப்பு கட்டணம் செலுத்த வேண்டும். உதாரணமாக தூத்துக்குடி – மதுரை இடையே ரயிலில் பயணம் செய்ய முன்பதிவற்ற கட்டணம் ரூபாய் 70, முன்பதிவு கட்டணம் ரூபாய் 145, டிரிசர்வ்டு கட்டணம் ரூபாய் 110 என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..ஆண் நண்பர்களுடன் உல்லாசம்.. போதையில் தள்ளாடிய தோழிகள் - காதலிக்கு முன்னாள் காதலன் கொடுத்த அதிர்ச்சி