
திருவள்ளூர்
திருவள்ளூர் பகுதியில் ஒரே நாளில் ஆறு இளம் பெண்கள் மாயமானதால் மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவலாளர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .
திருவள்ளூர் மாவட்டம், ஜெயா நகரைச் சேர்ந்த ஏசுதேவேந்திரனின் மகள் மதுபாலா (22). இவர், பொறியியல் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 21-ஆம் தேதி சந்தைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து அவரது தந்தை திருவள்ளூர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிந்து காவலாளர்கள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
இதேபோல, வேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிரீதி (18), திருத்தணி அருகே வி.சி.ஆர்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த வேதவள்ளி(18), திருவாலங்காடு சந்தியா(18), ஆர்.கே.பேட்டை பகுதியைச் சேர்ந்த உமாமகேஸ்வரி(21), சோழவரம் மஞ்சுமாதா (24) என ஆறு பேரும் ஒரே நாளில் மாயமாகி உள்ளனர்.
இதுகுறித்து அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் வழக்குப் பதிந்து, காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஒரேநாளில் ஆறு இளம்பெண்கள் மாயமான சம்பவத்தால் அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அசத்தில் உள்ளனர்.