வைகை ஆற்றில் தண்ணீர் வரத்தால் 12 கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு நீங்கும்; மக்கள் மகிழ்ச்சி…

 
Published : Jan 30, 2017, 11:12 AM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
வைகை ஆற்றில் தண்ணீர் வரத்தால் 12 கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு நீங்கும்; மக்கள் மகிழ்ச்சி…

சுருக்கம்

சாரல் மழையால் மூல வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள தண்ணீர் வரத்தால் 12 கிராமங்களுக்கு இருக்கும் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என்பதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. சனிக்கிழமை, பெரியகுளத்தில் அதிக அளவாக 30 மி.மீ. மழை பெய்தது.

தேனியில் 2.4 மி.மீ., போடியில் 8.4, சோத்துப்பாறை அணை நீர்ப்பிடிப்பில் 20, மஞ்சளாறு அணை நீர்ப்பிடிப்பில் 8, வைகை அணை நீர்ப்பிடிப்பில் 4, வீரபாண்டியில் 10, உத்தமபாளையத்தில் 8, கூடலூரில் 3.6, தேக்கடியில் 4.6 மி.மீ. என மழை அளவு பதிவாகியுள்ளது.

வருசநாடு வனப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையால், மூல வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

மூல வைகை ஆற்றுப் படுகையில் உள்ள குமணந்தொழு மற்றும் கோம்பைத்தொழு கூட்டுக் குடிநீர்த் திட்ட உறைகிணறுகளில் நீர் சுரப்பு ஏற்பட்டுள்ளதால், க.மயிலை ஒன்றியத்துக்கு உள்பட்ட 16 கிராமங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு நீங்கும் என்று பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை, வைகை அணை நீர்மட்டம் 25.39 அடியாக இருந்தது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 63 கன அடி. அணையில் தண்ணீர் இருப்பு 220 மில்லியன் கன அடி. அணையில் இருந்து மதுரை, ஆண்டிபட்டி - சேடபட்டி குடிநீர்த் திட்டங்களுக்கு விநாடிக்கு 40 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 110.80 அடியாக இருந்தது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 836 கன அடி. அணையில் தண்ணீர் இருப்பு 1,038 மில்லியன் கன அடி. அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

முதல்வரோடு முருகன் கைகோத்துள்ளார்..! ஸ்டாலினிடம் இருந்து முருகனை யாராலும் பிரிக்க முடியாது..! சேகர்பாபுவின் முரட்டு முட்டு..!
தனி அறையில் 45 வயது பெண்.. விடாமல் இரவு முழுவதும் 5 பேர்.! மறுநாள் மரணம்.. நடந்தது என்ன?