பல்கலையில் மாணவி வளர்மதி இடைநீக்கம்...!!! - குண்டர் சட்டத்தால் அதிரடி...

First Published Jul 23, 2017, 4:59 PM IST
Highlights
selam student valarmathi is suspended from university


கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்த சேலம் மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதையடுத்து பல்கலையில் இருந்து அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் படித்துவரும் மாணவி சேலத்தை சேர்ந்த வளர்மதி. இவர், மீத்தேன்,ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் சேலம் அரசு மகளிர் கலை கல்லூரிக்கு அருகில் விநியோகம் செய்தார்.

இதனால் நக்சலைட்டுகளுக்கு ஆட்கள் சேர்ப்பதாக குற்றம் சாட்டி இவரை கடந்த 13 ஆம் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இவரின் மீது திடீரென குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இதற்குஎதிர்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதைதொடர்ந்து இதுகுறித்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாணவி வளர்மதி மீது ஏற்கனவே 6 வழக்குகள் உள்ளதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த காரணத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்த சேலம் மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதையடுத்து பல்கலையில் இருந்து அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

click me!