அலர்ட்..! மாணவர்களுக்கு தொடர் விடுமுறை.. தொடர்ந்து வெளியான முக்கிய தகவல்..

By Thanalakshmi VFirst Published Jan 16, 2022, 6:20 PM IST
Highlights

10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 

தமிழகத்தில் 10,11 மற்றும் 12வகுப்பு மாணவர்களுக்கும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19 அன்று தொடங்கி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதிதாக உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் தினசரி கொரோனா தொற்று பரவலும் வேகமெடுக்க ஆரம்பித்தது.  இதனிடையே இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு நவம்பர் மாதத்தில் 7000க்கும் குறைவாக பதிவான நிலையில் தற்போது ஒரு நாள் பாதிப்பு மட்டுமே 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. 

எனவே இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா ஊரடங்கு கட்டுபாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. தமிழகத்தை பொறுத்தவரை இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, கடற்கரைக்கு செல்ல தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஜனவரி 31 ஆம் தேதி வரை மழலையர், நர்சரி பள்ளிகள் செயல்பட தடை போடப்பட்டுள்ளது.1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஆனாலும் தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் ஒமைரான் மற்றும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மாணர்களுக்கு ஏற்கனவே ஜனவரி 31 ஆம் தேதி விடுமுறை வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வரும் 31 ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் ஜனவரி 3 தேதி முதல் 15 வயது முதல் 18 வயது உள்ளோருக்கு கோவக்சின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி வரும் 31ஆம் தேதி வரை 10, 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனையடுத்து, வரும் 19 அன்று தொடங்கி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும் வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிகல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

click me!