
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை துவங்கி பெய்து வருகிறது. கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் துவங்கி இடைவிடாமல் மழை பல இடங்களில் பெய்து வருகிறது. மழைக்காலத் துவக்கமே பலத்த மழையுடன் துவங்கி, பல இடங்களில் வெள்ள நீரை பெருக்கியுள்ளது.
மழையினால் மாணவர்கள் படும் சிரமத்தைத் தவிர்க்க, மழை எச்சரிக்கை விடப்படும் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு ஒவ்வொரு நாளும் இப்போது விடுமுறை விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக இன்று முதல் பள்ளி நேரம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை அடுத்து, இனி பள்ளி வேலை நேரம், ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டு, முன்னதாகவே மாணவர்களை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டபட்டுள்ளது.
எனவே, மாலை 3 மணிக்கு மேல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இயங்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை அடுத்து, பள்ளிகள் இனி மாலை நேரத்தில் ஒரு மணி நேரம் முன்னதாகவே விடப்படும்.