
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை வீட்டுக்குள் அவ இவ என்று திட்டியதாக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மீது மீனாட்சி என்ற அதிகாரி குற்றசாட்டு வைத்தார். ஆனால் பேட்டியளிக்கும் போது மாண்புமிகு அம்மா, அம்மா என அமைச்சர் புகழாரம் சூட்டி வருகிறார் அமைச்சர் சரோஜா.
தருமபுரியில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரியாக இருந்து வருபவர் மீனாட்சி.
இவருக்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் பணம் எதுவும் கொடுக்காமல் இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமூக நலத்துறை அமைச்சராக இருக்கும் சரோஜா தன்னிடம் இந்த பதவிக்காக லஞ்சம் கேட்டு நெருக்கடி கொடுப்பதாகவும், தரவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என மிரட்டுவதாகவும், மீனாட்சி தொலைகாட்சியின் முன்பு தோன்றி பரபரப்பு புகார் அளித்தார்.
மேலும் எனக்கு இந்த பதவியை வழங்கிய முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவையும் அவ, இவ என்று ஒருமையில் பேசி அசிங்கமாக திட்டினார் எனவும் மீனாட்சி தெரிவித்தார்.
இதைதொடர்ந்து நேற்று இரவு ராயபேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த அமைச்சர் சரோஜா தன் மீதான குற்றசாட்டுக்கு விரைவில் அறிக்கை வெளியிடப்படும் என தெரிவித்துவிட்டு உடனே உள்ளே சென்று விட்டார்.
இதனால் அவர் எப்போது என்ன அறிக்கை விடப்போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்தார் அமைச்சர் சரோஜா.
அப்போது மாற்று திரானாளிகளின் திட்டம் குறித்தும், மாண்புமிகு அம்மா செய்து வைத்து விட்டு சென்ற திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.
அமைச்சர் சரோஜா பேசும்போது ஒவ்வொரு முறையும் அடிக்கடி மாண்புமிகு அம்மா அவர்கள் என்று வந்த வார்த்தை மீனாட்சி கூறிய கூற்றை மெய் படுத்தும் வகையில் சந்தேகிக்க வைக்கிறது.
கடைசி வரை அவர் வெளியிடுவேன் என்று கூறிய அறிக்கையை பற்றி வாய் திறக்காமல் ஜகா வாங்கி சென்றுவிட்டார் அமைச்சர் சரோஜா...