
காஞ்சிபுரம்
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த கோரி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 4-வது நாளாக கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இந்தியா முழுவதுமுள்ள கிராமப்புற அஞ்சல் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழிழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், "ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தவும்,
கடந்த 2016-இல் அரசுக்கு வழங்கப்பட்ட கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்தவும்" வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு தலைமை அஞ்சல் அலுவலகத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது 4-வது நாளாகும்
நேற்று அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் தலைவர் வி.சந்தானம் தலைமைத் தாங்கினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய அஞ்சல் துறையில் முதுகெலும்பாய் செயல்படும் கிராமிய அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கையான ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர்.