
ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் பவுடரை நீண்டநாட்கள் பயன்படுத்தியதால், புற்றுநோய் வந்தது எனக்கூறி வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு ரூ.700 கோடி(11 கோடி அமெரிக்க டாலர்) இழப்பீடு தர அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் விர்ஜினியா நகரைச் சேர்ந்தவர் ஸ்லெம்ப்(வயது62). இவர் கருப்பை புற்றுநோயால் அவதிப்பட்டு, அதற்கு கடந்த 2012ம் ஆண்டில் இருந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில்,கடந்த 40 ஆண்டு காலமாக ஜான்சன் அன்ட்ஜான்சனின் தயாரிப்புகளான பேபி பவுடர், உடலுக்கு பூசும் பவுடர் உள்ளிட்ட பொருட்களை தான் பயன்படுத்தி வந்ததே புற்றுநோய் ஏற்படக்காரணம் எனக்கூறி மிசவுரி நகர நீதிமன்றத்தில் ஸ்லெம்ப் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நடந்து முடிந்த நிலையில் வியாழக்கிழமை நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், பாதிக்கப்பட்ட பெண் ஸ்லெம்புக்கு ரூ.700 கோடி (11 கோடி டாலர்) இழப்பீடு வழங்க ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். மேலும், ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் தங்கள் பொருட்களை பயன்படுத்தினால், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என எந்த எச்சரிக்கையும் அளிக்கவில்லை எனக் கூறி இதுவரை 2,400பேர் மனுச் செய்துள்ளனர். இதில் தவறு வாங்கிப் பயன்படுத்திய நுகர்வோர்கள் மீதி இல்லை, தயாரித்த நிறுவனம் மீதுதான் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் இழப்பீடு வழங்கப்போவதில்லை மேல்முறையீடு செய்வோம் எனத் தெரிவித்தள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “ அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து வருந்துகிறோம். ஆனால், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வோம். நிறுவனத்தின் பெயரைக் காப்போம்” எனத் தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட பெண் ஸ்லெம்பின் வழக்கறிஞர் டெட் மெடோஸ் கூறுகையில், “ எச்சரிக்கையும் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் செயல்படவில்லை என அறிவியல் ரீதியான ஆதரங்களை மீண்டும் நாங்கள் இந்த நிறுவனத்துக்கும், நீதிமன்றத்துக்கும் தெரிவிப்போம். அமெரிக்க பெண்களுக்கென்று இருக்கும் மரியாதைகளையும், பொறுப்புகளையும் தொடர்ந்து இந்த நிறுவனம்
மறுத்து வருகிறது” எனத்தெரிவித்தார்.