மின்சாரம் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் – முதலமைச்சர் எடப்பாடி உத்தரவு...

 
Published : Jun 08, 2017, 03:00 PM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
மின்சாரம் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் – முதலமைச்சர் எடப்பாடி உத்தரவு...

சுருக்கம்

Rs 3 lakh per family for the death toll of electricity

மின்சாரம் தாக்கி உயிரிழந்தோரின் 7 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டம், கீழ்முருங்கை கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் பம்பு செட்டை இயக்க சென்ற போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு வட்டம் மற்றும் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் மகள் லிட்வின் புனிதா மின் விளக்கு கம்பம் சாய்ந்து விழுந்ததில் உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம், பஞ்சு காளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி மின் கம்பத்தில் ஏறி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்ட போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

வேலூர் மாவட்டம், கெஜல்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மனைவி சாவித்திரி வீட்டின் அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம், கவுண்டன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம், சங்கனுர் கிராமத்தைச் சேர்ந்த பெனிடிக் லாரண்ஸ் மின் கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், குளப்புறம் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

இந்நிலையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த மேலே குறிப்பிட்டுள்ளோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் , மின்சாரம் தாக்கி உயிரிழந்த 7பேரின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளார்.

அவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

மளமளவென பற்றி எரிந்த எல்ஐசி அலுவலகம்! பெண் மேலாளர் பலியானது எப்படி? பரபரப்பு தகவல்
அரசு வேலை வேண்டுமா.! இனி ஒரு ரூபாய் செலவு இல்லை.! தமிழக அரசின் ஜாக்பாட் அறிவிப்பு!