2வது நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்

 
Published : Oct 09, 2016, 12:23 AM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
2வது நாளாக ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்

சுருக்கம்

இலங்கை கடற்படையினரை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் இன்று 2வது நாளாக தொடர்கிறது.

ராமேஸ்வம் மீனவர்கள், கடலில் மீன்பிடிக்க செல்லும்போது, இலங்கை கடற்படையினர், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, வலைகளை அறுத்து கடலில் வீசுவது, படகுகளை சேதம் செய்வது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது.

இதனை தட்டி கேட்கும் மீனவர்கள் பலர், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது படகுகள், வலைகளும் பறிமுதல் செய்து கொண்டு செல்கின்றனர்.

இதுபோன்ற இலங்கை கடற்படையின் அத்துமீறலை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மீனவர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் இன்று 2வது நாளாக நடக்கிறது. இந்த போராட்டம் காரணமாக 800 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால், மீன்பிடி தொழிலை சேர்ந்த தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை விடுவிக்கக வேண்டும். இலங்கை வசமுள்ள 115 விசை படகுகளை விடுவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள், இந்த காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!