
அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு, சர்ச்சையை ஏற்படுத்துபவர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிசுவாமி. சமீபத்தில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்.
கடந்த மாதம் ரஜினிகாந்த், அனைத்து மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்தார். அப்போது, தனது அரசியல் பிரவேசம் குறித்து, பகிரங்கமாக அறிவித்தார். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அரசியல் கட்சியினர் பலரும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இதில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக மறைமுகமாக கூறியதால், பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ரஜினிக்கு எதிராக பல்வேறு கருத்துகளை பதிவு செய்துவருகிறார்.
“ரஜினிக்கு படிப்பறிவு இல்லை. ஆங்கில அறிவு்ம இல்லை. பொதுவாழ்க்கைக்கு அவர் வர தகுதியில்லாதவர்” என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில், இது ரஜினி ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ரஜினியை சுப்பிரமணிய சுவாமி ஒருமையிலும் பேசினார். இதனால் கொந்தளிப்பு அதிகரித்தது.
இதற்கு பதிலடி கொடுக்கும விதமாக, நடிகர் ரஜினியின் நீண்ட கால நண்பர் ராஜ்பகதூர், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியை விட ரஜினிக்கு அறிவு அதிகமாகவே இருக்கிறது என கூறினார்.
இந்நிலையில் மதுரையில் ஒரு நிகழ்ச்சியில் ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் கலந்து கொண்டார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சுப்பிரமணிய சுவாமியை காட்டிலும் ரஜினிக்கு அறிவாற்றல் அதிகமாகவே உள்ளது. அவர் அரசியலில் ஈடுபடுவது குறித்து பேசவேண்டாம் என்று ரஜினி என்னிடம் கூறியுள்ளார். ரஜினியை பற்றி சுப்பிரமணிய சுசுவாமிக்கு என்ன தெரியும். இதுபோல் வாய்க்கு வந்தபடி பேசுவது சரியா... என்றார்.