நாளை மற்றும் நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது .
நிலப்பகுதியில் குளிர் காற்று வீசுகின்ற காரணம் காரணமாக, வெப்பநிலை சற்று குறைவாக காணப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோன்று லேசான காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேற்கு திடை நோக்கி நகர்ந்து வருவதால்,அதாவது வட திசை காற்றினால் குளிர் காற்று வீசும் என தெரிவிக்கப் பட்டு உள்ளது.
மேலும்,கடலோரபகுதிகளில் வேகமாக காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப் பட்டு உள்ளது. அதன்படி மணிக்கு 45 முதல் 55 கிமீ வரை காற்று வீசும் என்றும், குறிப்பாக ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களில் குளிர் கொஞ்சம், அதிகமாக இருக்கும் என சென்னைவானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார்.